/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நாசமான நல்லதண்ணீர் குளம் பராமரிக்க மாநகராட்சி முன்வருமா?
/
நாசமான நல்லதண்ணீர் குளம் பராமரிக்க மாநகராட்சி முன்வருமா?
நாசமான நல்லதண்ணீர் குளம் பராமரிக்க மாநகராட்சி முன்வருமா?
நாசமான நல்லதண்ணீர் குளம் பராமரிக்க மாநகராட்சி முன்வருமா?
ADDED : மே 29, 2024 12:31 AM

பெருங்களத்துார், பெருங்களத்துார் நல்லதண்ணீர் குளம் முறையாக பராமரிக்காத காரணத்தால், குப்பை கழிவுகள் நிறைந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இக்குளத்தை துார்வாரி, ஆழப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தாம்பரம் மாநகராட்சி, பெருங்களத்துார், காமராஜர் நெடுஞ்சாலையை ஒட்டி நல்லதண்ணீர் குளம் உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன், இந்த குளத்து நீரை சுற்றுப்புற பகுதி வாசிகள் குடிநீராக பயன்படுத்தி வந்தனர்.
நாளடைவில், உள்ளாட்சி அமைப்பு வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதால், இக்குளத்து தண்ணீரை குடிப்பதை மக்கள் தவிர்த்தனர்.
இதனால், இக்குளம் பராமரிப்பில்லாமல் போனது. கால்நடைகள் குடிப்பதற்கு மட்டுமே குளத்து நீர் பயன்பட்டு வந்தது.
சமீப காலமாக, குளத்தின் பராமரிப்பு மிக மோசமான நிலையில் உள்ளது. குளத்தைச் சுற்றி கருவேல மரங்கள் வளர்ந்து, புதர்போல் மாறிவிட்டது. குப்பைக் கழிவுகளை மூட்டை மூட்டையாக கட்டி வந்து, குளத்தில் வீசிவிட்டு செல்கின்றனர்.
இதனால், குளத்து நீர் துர்நாற்றம் வீசுகிறது. தண்ணீரில் மிதக்கும் கழிவுகளை சுத்தம் செய்து, கருவேல மரங்களை அகற்றி, சுற்றுச்சுவர் அமைத்தால் குளம் பாதுகாக்கப்படும். அப்பகுதி வாசிகளும் நடைபயிற்சி மேற்கொள்ள வசதியாக இருக்கும்.
எனவே, குப்பை மற்றும் கருவேல மரங்கள் வளர்ந்துள்ள நல்லதண்ணீர் குளத்தை பராமரிக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.