/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தினமும் நெரிசலில் சிக்கி பயணியர் அவதி கிண்டி வரை 'கட் சர்வீஸ்' இயக்கப்படுமா?
/
தினமும் நெரிசலில் சிக்கி பயணியர் அவதி கிண்டி வரை 'கட் சர்வீஸ்' இயக்கப்படுமா?
தினமும் நெரிசலில் சிக்கி பயணியர் அவதி கிண்டி வரை 'கட் சர்வீஸ்' இயக்கப்படுமா?
தினமும் நெரிசலில் சிக்கி பயணியர் அவதி கிண்டி வரை 'கட் சர்வீஸ்' இயக்கப்படுமா?
ADDED : மே 29, 2024 12:10 AM
சென்னை, சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில், 200க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் தினமும் இயக்கப்படுகின்றன. இவற்றில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.
மேலும், கிண்டியை சுற்றி தொழிற்பேட்டைகள், தனியார் நிறுவன அலுவலகங்கள் அதிகமாக இருக்கின்றன. அதேபோல், இருபுறமும் பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் நிலையம் இருப்பதால், பல்வேறு இடங்களுக்கு செல்வதற்கு வசதியாக இருக்கிறது.
இதனால், இந்த ரயில் நிலையத்திற்கு தினமும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து பயணம் செய்து வருகின்றனர். கிண்டி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கிறது.
எனவே, சென்னை கடற்கரை - கிண்டி, கிண்டி - தாம்பரம் வரையிலும் கட் சர்வீஸ்களை இயக்கினால், கூட்ட நெரிசலை குறைக்கலாம் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ரயில் பயணியர் கூறியதாவது:
கிண்டி ரயில் நிலையம் கடந்த சில ஆண்டுகளாக பெரிய ரயில் நிலையமாக மாறிவிட்டது. இதனால், மின்சார ரயில்களில் பயணம் செய்யும் பயணியரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, 'பீக் ஹவர்' எனப்படும் காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் பயணியர் கூட்டம் அதிகமாக இருக்கிறது. கிண்டி வரையில் பேருந்து மற்றும் மெட்ரோவில் வரும் பயணியர் கூட்டம் ஒரே நேரத்தில் குவிந்து விடுவதால், இங்கிருந்து செல்லும் மின்சார ரயில்களில் நெரிசல் அதிகமாக இருக்கிறது.
எனவே, கிண்டியில் இருந்து கடற்கரை மற்றும் தாம்பரம் வரையில் 'கட் சர்வீஸ்' மின்சார ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, சென்னை ரயில் கோட்ட அதிகாரி கூறுகையில், 'மின்சார ரயில் தடத்தில் 'கட் சர்வீஸ்' இயக்குவதில் நடைமுறை சிக்கல் உள்ளன. இருப்பினும், பயணியரின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்படும்' என்றார்.