ADDED : ஜூன் 25, 2024 12:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி அருகே குமணன்சாவடி-- - பூந்தமல்லி நெடுஞ்சாலையை பயன்படுத்தி தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
சென்னீர்குப்பம் மற்றும் காட்டுப்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் சேகரமாகும் குப்பை, இந்த சாலையில் கொட்டப்படுகிறது.
குப்பையில் உணவு தேடி நாய், மாடு உள்ளிட்ட கால்நடைகள் வருகின்றன.
இவை உணவுக்காக சண்டையிட்டு நெடுஞ்சாலையில் நுழைவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, நெடுஞ்சாலையோரம் உள்ள குப்பையை அகற்றி, குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.சுரேஷ், பூந்தமல்லி.

