/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடாவடி நபர்களை அமைச்சர் தடுப்பாரா?
/
அடாவடி நபர்களை அமைச்சர் தடுப்பாரா?
ADDED : ஜூலை 30, 2024 12:25 AM
விசேஷ காலங்களில் வடபழனி ஆண்டவர் கோவிலில் உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ அரசு அலுவலர்கள் அடையாள அட்டையை காண்பித்து கட்டணம் செலுத்தாமல் நேரடியாக தரிசனம் செய்ய அடம்பிடிப்பது வழக்கம்.
ஆடி கிருத்திகையான நேற்றும், அமைச்சர்களின் உதவியாளர்கள், தலைமைச் செயலகம், உயர் நீதிமன்ற ஊழியர்கள் என, 500க்கும் மேற்பட்டோர் கட்டணம் செலுத்தாமல், வரிசையிலும் நிற்காமல், நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கும்படி அடம்பிடித்து உள்ளே சென்றனர்.
இது கோவில் நிர்வாகத்திற்கு பெரும் இடையூறு ஏற்படுத்தியது. 100 ரூபாய் கட்டணம் செலுத்தி, இரண்டு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்த பக்தர்களுக்கு, இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டதால் சிறுவாபுரி, திருத்தணியில் இது தடுக்கப்பட்டுள்ளது. வடபழனியிலும் இப்பிரச்னையில் தனிகவனம் செலுத்தி அமைச்சர் உத்தரவிட பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.