/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆலந்துார் மண்டலத்திற்கு தீயணைப்பு நிலையம் தேவை பல ஆண்டு கோரிக்கைக்கு தீர்வு கிடைக்குமா?
/
ஆலந்துார் மண்டலத்திற்கு தீயணைப்பு நிலையம் தேவை பல ஆண்டு கோரிக்கைக்கு தீர்வு கிடைக்குமா?
ஆலந்துார் மண்டலத்திற்கு தீயணைப்பு நிலையம் தேவை பல ஆண்டு கோரிக்கைக்கு தீர்வு கிடைக்குமா?
ஆலந்துார் மண்டலத்திற்கு தீயணைப்பு நிலையம் தேவை பல ஆண்டு கோரிக்கைக்கு தீர்வு கிடைக்குமா?
ADDED : மே 11, 2024 12:14 AM
ஆலந்துார் மண்டலத்திற்கு தனியாக தீயணைப்பு நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தனி முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் விரிவாக்கத்தின் போது, ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி இணைத்து ஆலந்துார் மண்டலம் உருவாக்கப்பட்டது. இம்மண்டலத்தில், 12 வார்டுகள் அமைந்துள்ளன.
சென்னை நகரின் பிரதான வர்த்தக மையம், இந்த மண்டலத்தின் நந்தம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ளது. ஆலந்துார், பழவந்தாங்கல், மீனம்பாக்கம், ஆதம்பாக்கம், நந்தம்பாக்கம், மணப்பாக்கம் மற்றும் முகலிவாக்கம் பகுதிகளில் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.
மேலும், ஆலந்துார் கண்டோன்மென்ட் பகுதியில் கீழ்த்தட்டு மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்த மண்டலத்தில் தீ விபத்துகள் ஏதேனும் நடந்தால் கிண்டி ராஜ்பவன், வேளச்சேரி, குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் வரவேண்டியுள்ளது.
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், தீயணைப்பு வாகனங்கள் வந்து சேர்வதற்குள் பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. அதேபோல, மீனம்பாக்கத்தில் இருந்து கத்திப்பாரா வரை உள்ள ஜி.எஸ்.டி., சாலையில் அடிக்கடி கார் உள்ளிட்ட வாகனங்கள் தீப்பற்றி எரிந்து நாசமாகின்றன.
பருவமழைக் காலத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படும் போது, தீயணைப்பு வீரர்களின் சேவை அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது.
இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், ஆலந்துார் மண்டலத்திற்கு தீயணைப்பு நிலையம் தனியாக அமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக நலச்சங்கத்தினர் கோரி வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து தனி கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.
- -நமது நிருபர்- -