/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாணவியரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் கைது
/
மாணவியரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் கைது
ADDED : மே 30, 2024 12:28 AM
வேப்பேரி, சென்னை, வளசரவாக்கம் ஜெய்நகர், இரண்டாவது தெருவிலுள்ள ஒரு வீட்டில், மாணவியரை வைத்து பாலியல் தொழில் நடத்தப்படுவதாக, விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு ஆய்வு மேற்கொண்டதில், மாணவியரை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரிந்தது.
இதைத் தொடர்ந்து, பாலியல் தொழில் நடத்தி வந்த நதியா, 39, சுமதி, 46, உட்பட, 8 பேரை கைது செய்தனர். மேலும் இவர்களிடம் சிக்கியிருந்த இரு மாணவியரை மீட்டு, அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், இந்தவழக்கில் தொடர்புடைய, செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரைச் சேர்ந்த விஜயலட்சுமி, 51, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.