/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீட்டை டாஸ்மாக் கடையாக மாற்றிய பெண் கைது
/
வீட்டை டாஸ்மாக் கடையாக மாற்றிய பெண் கைது
ADDED : ஆக 01, 2024 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓட்டேரி, ஓட்டேரி, டோபிகானா குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அந்த வீட்டிற்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர். வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 குவார்ட்டர் மதுபாட்டில்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக காட்டு ரோஜா, 65 என்ற பெண்ணை கைது செய்தனர். இவர், டாஸ்மாக் இயங்காத நேரத்தில் தன் வீட்டையே டாஸ்மாக் கடையாக மாற்றி, அதிக விலைக்கு சரக்குகளை விற்றது விசாரணையில் தெரியவந்தது.