/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கந்துவட்டி கொடுமையால் துாக்கிட்டு பெண் தற்கொலை
/
கந்துவட்டி கொடுமையால் துாக்கிட்டு பெண் தற்கொலை
ADDED : ஜூலை 31, 2024 12:11 AM
வியாசர்பாடி, வியாசர்பாடி, திலகர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரங்கன் மனைவி ராணி, 55. இவர்களது இரண்டு மகன்களும், மகளும் திருமணமாகி, அவரவர் வீட்டில் வசிக்கின்றனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன், சசி என்பவரிடம் வார வட்டிக்கு 1.50 லட்ச ரூபாய் ராணி கடன் வாங்கி உள்ளார்.
வட்டி தொகை, வாரம் 15,000 ரூபாய் என ஆறு மாதமாக, மொத்தம் 3 லட்ச ரூபாய் கட்டியுள்ளார். இந்த நிலையில், கடன் கொடுத்த சசி, கடந்த 29ம் தேதி ராணியின் வீட்டிற்கு சென்று வட்டி தொகையை கேட்டு, தகாத வார்த்தையால் திட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்து காணப்பட்ட ராணி, நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். கணவர் ரங்கன், ராணியின் உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
அங்கு மருத்துவ பரிசோதனையில் ராணி இறந்தது தெரிய வந்தது. தற்கொலை செய்வதற்கு முன், ராணி தன் சாவுக்கு காரணம் சசி என எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றி, செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர்.