/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நாய்க்காக திரும்பிய ஆட்டோ லாரி மீது மோதி பெண் பலி
/
நாய்க்காக திரும்பிய ஆட்டோ லாரி மீது மோதி பெண் பலி
ADDED : ஜூலை 25, 2024 01:08 AM

காசிமேடு, சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் செல்வகுமார், 39; ேஷர் ஆட்டோ ஓட்டுனர். இவர், நேற்று அதிகாலை தன் ஆட்டோவில், எண்ணுாரில் இருந்து திருவல்லிக்கேணியைச் சேர்ந்த வசந்தி, 36, அவரது மகள் பாரதி, 10, பாட்டி சிவகாமி, 55, எண்ணுார், முகத்துவார குப்பத்தைச் சேர்ந்த ராதிகா, 34, சுகந்தி, 38, பழவேற்காட்டைச் சேர்ந்த கவிதா, 42, ஆகியோரை சவாரி ஏற்றி, காசிமேடு மீன்பிடித் துறைமுகம் வழியாக திருவல்லிக்கேணி சென்று கொண்டிருந்தார்.
சூரிய நாராயணா சாலையில் செல்லும்போது, நாய் ஒன்று குறுக்கே வந்தது. திடீரென செல்வகுமார் ஆட்டோவை திருப்பவும், கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்தது. இதில் வசந்தி, பாரதி, சிவகாமி, சுகந்தி ஆகியோர் படுகாயமடைந்தனர். சிகிச்சை பலனின்றி கவிதா நேற்று மதியம் உயிரிழந்தார்.