/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சுவரில் ௶'உச்சா' போனவர் மீது சுடுதண்ணீர் ஊற்றிய பெண்
/
சுவரில் ௶'உச்சா' போனவர் மீது சுடுதண்ணீர் ஊற்றிய பெண்
சுவரில் ௶'உச்சா' போனவர் மீது சுடுதண்ணீர் ஊற்றிய பெண்
சுவரில் ௶'உச்சா' போனவர் மீது சுடுதண்ணீர் ஊற்றிய பெண்
ADDED : மார் 03, 2025 12:52 AM
ஓட்டேரி, ஓட்டேரி, மங்களபுரம், சேமாத்தம்மன் காலனி ஒன்றாவது தெருவைச் சேர்ந்தவர் ஜஸ்டின் ராஜ், 42 ; கூலி தொழிலாளி.
இவர் நேற்று நள்ளிரவு 12: 15மணியளவில், வேலைக்கு சென்று வீடு திரும்பியுள்ளார். அப்போது, அவரது வீட்டின் அருகேயுள்ள மற்றொரு வீட்டின் சுவரில் சிறுநீர் கழித்துள்ளார்.
இதை கண்டு ஆத்திரமடைந்த அந்த வீட்டைச் சேர்ந்த மகாலட்சுமி, 26, என்பவர், ஜஸ்டின் ராஜ் மீது சுடு தண்ணீரை ஊற்றியுள்ளார்.
இதில், ஜஸ்டின் ராஜ் இடது தோற்பட்டை மற்றும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. வலி அதிகரித்ததால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஜஸ்டின் ராஜ் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கு பதிந்த ஓட்டேரி போலீசார், மகாலட்சுமியிடம் விசாரிக்கின்றனர்.