/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஸ்கூட்டரில் சென்ற பெண் அரசு பஸ் மோதி பலி
/
ஸ்கூட்டரில் சென்ற பெண் அரசு பஸ் மோதி பலி
ADDED : ஆக 24, 2024 12:15 AM
சுங்குவார்சத்திரம்.
சுங்குவார்சத்திரம் அடுத்த மதுரமங்கலம், எம்பார் கோவில் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 35; கட்டுமான கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை, சக தொழிலாளியான முருகன், 48, என்பவருடன், 'ஆக்டிவா' ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்து வேலைக்கு சென்றார்.
அப்போது, திருமங்கலம் பாரதியார் சாலையிலுள்ள நான்கு முனை சந்திப்பில், பின்னால் வந்த அரசு பேருந்து, ராஜேஸ்வரி சென்ற ஸ்கூட்டரில் மோதியது.
இதில் தடுமாறி விழுந்த ராஜேஸ்வரி மீது, பேருந்தின் இடது முன்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. அங்கிருந்தோர் ராஜேஸ்வரியை மீட்டு, '108' ஆம்புலன்சில் ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு ராஜேஸ்வரி உயிரிழந்தார்.
ஸ்கூட்டரை ஓட்டிச் சென்ற முருகன், சிறு காயத்துடன் உயிர் தப்பினார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுனரை கைது செய்து விசாரிக்கின்றனர்.