/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நள்ளிரவில் பெண் அலறல்: பரபரப்பு ஏற்படுத்திய கார் எங்கே?
/
நள்ளிரவில் பெண் அலறல்: பரபரப்பு ஏற்படுத்திய கார் எங்கே?
நள்ளிரவில் பெண் அலறல்: பரபரப்பு ஏற்படுத்திய கார் எங்கே?
நள்ளிரவில் பெண் அலறல்: பரபரப்பு ஏற்படுத்திய கார் எங்கே?
ADDED : மே 16, 2024 12:38 AM
தி.நகர். சென்னை, தி.நகர், பசுல்லா சாலையில் நேற்று முன்தினம் இரவு 12:00 மணிக்கு 'விவேக் ஷோரூம்' சிக்னலில் கார் ஒன்று சென்றது.
அந்த காரில் சென்ற இளம்பெண் ஒருவர், 'காப்பாற்றுங்கள்' எனக் கூறி உதவி கேட்டு அலறினார். இதை பார்த்த பொதுமக்கள் சிலர், காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.
காரை இயக்கிய நபர், உடனடியாக கோடம்பாக்கம், அசோக் நகர் வழியாக சென்றார். அசோக் நகர் உதவி கமிஷனர் தலைமையில் நள்ளிரவில் வாகன சோதனை நடத்தினர்.
ஆனால் அந்த கார் எந்த திசைக்கு சென்றது என தெரியவில்லை. போலீசாரின் விசாரணையில் சில்வர் கலர் 'ஹோண்டா சிட்டி' கார், பதிவெண் 2820 என தெரிந்தது. தொடர்ந்து விசாரிக்கின்றனர். நள்ளிரவு பெண் கடத்தப்பட்டாரா, மதுபோதையில் அலறினாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.