/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப பெண்கள் தயாராகி விட்டனர்' திருவொற்றியூரில் 'மாஜி' எம்.எல்.ஏ., பேச்சு

ADDED : பிப் 25, 2025 01:02 AM

திருவொற்றியூர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளையொட்டி, திருவொற்றியூர் மேற்கு பகுதி அ.தி.மு.க., பகுதி செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான குப்பன் தலைமையில், பொதுமக்களுக்கு உணவு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது.
பெரியார் நகர், அஜாக்ஸ் பேருந்து நிலையம், பாரதியார் நகர், எண்ணுார், எர்ணாவூர் முருகன் கோவில் சந்திப்பு, மணலி - புதிய எம்.ஜி.ஆர் நகர் உட்பட ஆறு இடங்களில், 2,500க்கும் அதிகமானோருக்கு, வேட்டி - சேலை மற்றும் அறுசுவை உணவு வழங்கப்பட்டன.
பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, முன்னாள் எம்.எல்.ஏ., குப்பன் பேசியதாவது:
தி.மு.க., ஆட்சியில் மக்கள் நெருங்க முடியாத அளவிற்கு, ஆட்சியாளர்கள் உள்ளனர். எம்.எல்.ஏ., மண்டல குழு தலைவர் துவங்கி, கவுன்சிலர்கள் வரை 'கட்டிங்' பேர்வழியாக உள்ளனர்.
பெண்களுக்கு 1,000 ரூபாய் கொடுத்து, விலைவாசி உயர்வு, வரி உயர்வு மூலமாக, பல ஆயிரங்களை சுருட்டும் தி.மு.க., ஆட்சியை, வீட்டிற்கு அனுப்ப தயாராகிவிட்டனர்.
பாலியல் தொல்லை, சட்டம் - ஒழுங்கு சீர் கேடு என, மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். வரும் தேர்தலில், நிச்சயம் அ.தி.மு.க., வெல்லும்; பழனிசாமி முதல்வராவார்.
இவ்வாறு, அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட செயலர் மூர்த்தி, சுரேஷ், பாலாஜி, வினோத்குமார் உட்பட ஏராளமான அ.தி.மு.க.,வினர் பங்கேற்றனர்.