/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மணலியில் தொடரும் குடிநீர் தட்டுப்பாடு காலி குடத்துடன் காத்து கிடக்கும் பெண்கள்
/
மணலியில் தொடரும் குடிநீர் தட்டுப்பாடு காலி குடத்துடன் காத்து கிடக்கும் பெண்கள்
மணலியில் தொடரும் குடிநீர் தட்டுப்பாடு காலி குடத்துடன் காத்து கிடக்கும் பெண்கள்
மணலியில் தொடரும் குடிநீர் தட்டுப்பாடு காலி குடத்துடன் காத்து கிடக்கும் பெண்கள்
ADDED : செப் 03, 2024 12:23 AM

மணலி, சென்னை மாநகராட்சி, 15வது வார்டு முதல் 22வது வார்டு வரையிலான எட்டு வார்டுகள், மணலி மண்டலத்தை உள்ளடக்கியது. இந்த மண்டலத்தின் நீராதாராமாக, மீஞ்சூர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், புழல் ஏரி நீர் மற்றும் நிலத்தடி நீர்.
இதில், 16வது வார்டு, பர்மா நகரில் 18 தெருக்களில், 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியின் அருகே சடையங்குப்பம் கிராமம் உள்ளது. இங்கு, 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இங்குள்ள குடியிருப்புகளுக்கு, மீஞ்சூர் - கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ், கீழ்நிலை மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் இருந்து, குழாய் வழியாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றன.
சமீபமாக இப்பகுதியில் சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில், கடந்த நான்கு நாட்களாக சரிவர குடிநீர் வினியோகம் இல்லாத காரணத்தால், பெண்கள் குடங்களுடன் குடிநீர் குழாய் அருகே காத்து கிடக்கும் நிலைமை உள்ளது.
பெண்கள், கூலித்தொழிலாளிகள் குறிப்பிட்ட நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாத நிலைமை உள்ளது. அதேபோல, குடிநீர் வினியோகத்தின் போது, தாழ்வான பகுதிகளில் வினியோகமாகும் குடிநீரின் வேகம் போன்று, மேடான பகுதிகளுக்கு வினியோகமாவதில்லை.
சொட்டு நீர் போல் குடிநீர் வருவதால், பெண்களிடையே தேவையின்றி வீண் குழாயடி சண்டைகள், இந்த நுாற்றாண்டிலும், அதுவும் சென்னை மாநகரில் தொடரும் அவலம் உள்ளது.
இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக அப்பகுதியில் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
ஒரு சில நேரங்களில், குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதி பெண்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.