/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கள்ளச்சந்தையில் மது விற்ற பெண்கள் கைது
/
கள்ளச்சந்தையில் மது விற்ற பெண்கள் கைது
ADDED : மே 03, 2024 12:39 AM
புளியந்தோப்பு, மே தினத்தை முன்னிட்டு, டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.
அன்று, புளியந்தோப்பு வாசுகி நகரில், குவார்ட்டர் மதுபாட்டில்களை பதுக்கி விற்ற, அமுல், 29, என்ற பெண்ணையும், கொன்னுார் நெடுஞ்சாலை பேருந்து நிறுத்தம் அருகே, மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற, ரெட்டேரியைச் சேர்ந்த கலைவாணி,45, என்ற பெண்ணையும், போலீசார் கைது செய்து 25 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
புளியந்தோப்பு
புளியந்தோப்பு, வாசுகி நகர் பழைய பாலம் அருகே, உழைப்பாளர் தினத்தன்று கள்ளச்சந்தையில் மது விற்ற, நரசிம்மன் நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் அஜித்குமார்,28, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இவரிடமிருந்து 16 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் வியாசர்பாடி, எம்.எம்.கார்டன் பகுதியில் மதுபாட்டில் விற்ற, எம்.எம்.கார்டன் மூன்றாவது தெருவைச் சேர்ந்த வித்யலஷ்மி, 32, என்பவரை கைது செய்து, 20 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்து, அவரை சிறையில் அடைத்தனர்.