/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சீட்டு பணம் வசூலித்த பெண்களிடம் ஏமாந்தோர் வீட்டிற்கு சென்று தகராறு
/
சீட்டு பணம் வசூலித்த பெண்களிடம் ஏமாந்தோர் வீட்டிற்கு சென்று தகராறு
சீட்டு பணம் வசூலித்த பெண்களிடம் ஏமாந்தோர் வீட்டிற்கு சென்று தகராறு
சீட்டு பணம் வசூலித்த பெண்களிடம் ஏமாந்தோர் வீட்டிற்கு சென்று தகராறு
ADDED : பிப் 27, 2025 12:43 AM
புளியந்தோப்பு, புளியந்தோப்பு சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் ரவி, 40. இவர் உட்பட அப்பகுதியைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் திருவள்ளூரைச் சேர்ந்த டி.எல்.எஸ்., குரூப்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கண்ணன் உள்ளிட்டோரிடம், மாதம் 600 ரூபாய் வீதம் 90 லட்ச ரூபாய்க்கு சீட்டு கட்டியுள்ளனர்.
ஆனால் சீட்டில் கூறியபடி, மளிகை சாமான்கள், பாத்திரம் மற்றும் உடை எதுவும் தரவில்லை. இது குறித்து கடந்த ஜனவரி மாதம் மத்திய குற்றப்பிரிவில் புகார் தரப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்த நிலையில், கண்ணன் விரைவில் பொருட்களை தருவதாக வாய்மொழி உத்தரவாதம் அளித்துள்ளார்.
ஆனால் சொன்னபடி பொருட்கள் தராததால், கண்ணனின் உறவினர்களான புளியந்தோப்பைச் சேர்ந்த பத்மினி, புனிதா ஆகியோரின் வீட்டிற்கு சென்று, பணம் கட்டியவர்கள் தகராறு செய்துஉள்ளனர்.
இதுகுறித்து காவல் துறை கட்டுப்பாட்டறைக்கு புகார் சென்ற நிலையில், புளியந்தோப்பு போலீசார் சம்பவ இடம் சென்று விசாரித்தனர்.
இதில், பத்மினி என்பவர் 60 லட்ச ரூபாயும், புனிதா என்பவர் 30 லட்ச ரூபாயும் வசூலித்து, கண்ணனிடம் கொடுத்தது தெரியவந்தது. கண்ணன் பணத்தை தராததால், பொருட்கள் வழங்க முடியவில்லை என, போலீசாரிடம் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, போலீசார் புகார்தாரர்களை மத்திய குற்றப்பிரிவில் முறையிட அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.