தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அடையாற்றில் துார் வாரும் பணி தொடக்கம்

அடையாற்றில் துார் வாரும் பணி தொடக்கம்

அடையாற்றில் துார் வாரும் பணி தொடக்கம்


ADDED : ஜூலை 28, 2026 03:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 28, 2026 03:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: அடையாற்றை துார் வாரி சீரமைக்கும் பணியை, நீர்வளர்ச்சித்துறை அமைச்சர் ஆனந்த் நேற்று தொடங்கி வைத்தார்.

வடகிழக்கு பருவமழை இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ளதை அடுத்து, நீர் வழித்தடங்கள் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, அடையாற்றில் நீரோட்டத்தை பாதிக்கும், ஆகாயத்தாமரைகளை அகற்ற, நீர்வளத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் கைகோர்த்துள்ளன.

அந்த வகையில், சென்னை, விமான நிலைய ஓடுபாதை கீழ் நீரோட்ட பாதை முதல் திரு.வி.க., பாலம் வரை உள்ள அடையாறு ஆற்றில் வெள்ள நீர் தங்கு தடையின்றி செல்ல ஆகாய தாமரை, கழிவுகள் அகற்ற முடிவு செய்யப்பட்டது.

இப்பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளர்ச்சி துறை அமைச்சர் ஆனந்த், நேற்று மணப்பாக்கம் பகுதியில் தொடங்கி வைத்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து, சோழிங்கநல்லுார் பகுதியில் பகிங்ஹாம் கால்வாயில், துார் வாரும் பணியை தொடங்கி வைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us