நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை மாநகராட்சி, நுாற்றுக்கணக்கான தற்காலிக துாய்மை பணியாளர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது.
மாநகராட்சியில் 14 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருபவர்கள். கொரோனா மற்றும் பேரிடர் காலங்களில் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றியவர்கள். அவர்களை பணி நீக்கம் செய்வது மனித நேயமற்ற செயல்.
ஆட்சியாளர்களின் நலன்களுக்காக துாய்மை பணியாளர்களின் வாழ்வாதாரம் பலி கொடுக்கப்படுகிறது. அடித்தட்டு மக்களை பணிநீக்கம் செய்வது சமூக அநீதி என்பதை முதல்வர் ஸ்டாலின் உணர வேண்டும்.
சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை பணி நீக்கும் முடிவை கைவிட்டு, அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
ராமதாஸ்,
நிறுவனர், பா.ம.க.,