/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
யோகா: வெங்கடேஸ்வரா பள்ளி 'சாம்பியன்'
/
யோகா: வெங்கடேஸ்வரா பள்ளி 'சாம்பியன்'
ADDED : ஆக 09, 2024 12:31 AM

சென்னை, சென்னை, போரூர், ஆண்டியப்பன் யோகா மையத்தின் சார்பில், முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில், மாநில யோகா சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. 6, 8, 10, 12, 14 வயதுடைய பிரிவினருக்கு ஓபன் பிரிவில் போட்டிகள் நடத்தப்பட்டன.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட பல மாவட்டங்களின் பள்ளிகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர். இதில், சென்னை ராயப்பேட்டை வெங்கடேஸ்வரா பள்ளி மாணவர்கள் 20 பேர் பங்கேற்று, 10 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 2 தங்கம் பெற்றனர்.
அதேபோல் 14 வயது பிரிவில் 2 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம்; 17 வயதில் 2 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என, வெற்றிகளைக் குவித்து, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றனர்.
பதக்கங்களை வென்ற மாணவர்களை, பள்ளி ஆசிரியர்களும், நிர்வாகிகளும் பாராட்டினர்.