/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உடலில் காயங்களுடன் இளம்பெண் மர்ம மரணம்
/
உடலில் காயங்களுடன் இளம்பெண் மர்ம மரணம்
ADDED : ஆக 05, 2024 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, ஆவடி, பருத்திப்பட்டு, தனியார் குடியிருப்பைச் சேர்ந்தவர் பொறிராஜன், 32; ஐ.டி. ஊழியர்.
இவரது மனைவி சங்கீதா, 32, மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இரு தினங்களுக்கு முன் உயிரிழந்தார்.
அவரது உடல் சொந்த ஊரான, அரக்கோணத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு, சங்கீதாவின் உடலில் காயங்கள் இருப்பதாக கூறி, அவரது பெற்றோர், ஆவடி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர்.
திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆனதால், ஆர்.டி.ஓ., விசாரணை நடத்த உள்ளார்.