/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலீஸ் ஏட்டுவை தாக்கிய வாலிபர் கைது
/
போலீஸ் ஏட்டுவை தாக்கிய வாலிபர் கைது
ADDED : ஆக 04, 2024 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடுங்கையூர், கொடுங்கையூர் காவல் நிலையத்தில், தலைமை போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் ஜெய அந்தோணி சுந்தர்ராஜ்.
கடந்த 30ம் தேதி நள்ளிரவு கொடுங்கையூர், திருவள்ளுவர் நகர், 60 அடி சாலையில் ரோந்து பணியில் இருந்தார்.
அப்போது, அங்கு மது அருந்திய ஆறு பேர் கும்பலை கண்டித்தார். அதில் மூவர் அங்கிருந்து கிளம்பிய நிலையில், மற்ற மூவர் குடிபோதையில், ஜெய அந்தோணி சுந்தர்ராஜிடம் வீண் தகராறு செய்து தாக்கினர்.
தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு, வலது கண் புருவத்தில் மூன்று தையல்கள் போடப்பட்டன. கொடுங்கையூர் போலீசார் விசாரித்து, காவலரை தாக்கிய மணலி பரத், 27, என்பவரை, நேற்று கைது செய்தனர்.