/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூதாட்டியிடம் அத்துமீறல் வாலிபர் கைது
/
மூதாட்டியிடம் அத்துமீறல் வாலிபர் கைது
ADDED : ஜூலை 02, 2024 01:23 AM
ஓட்டேரி, ஓட்டேரியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி தங்கையுடன் தங்கி வருகிறார். நேற்று அதிகாலை 3:00 மணியளவில் வீட்டின் வெளியே படுத்திருந்த மூதாட்டியிடம், ஓட்டேரி, எஸ்.எஸ்.புரத்தைச் சேர்ந்த தனுஷ், 20, என்பவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
துாக்கத்தில் இருந்து விழித்தெழுந்த மூதாட்டி அதிர்ச்சியடைந்து, தன்னை தற்காத்துக்கொள்ள முயற்சித்தபோது, அவரது வலது கை விரலில் காயம் ஏற்பட்டது.
இதற்காக, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற போது மருத்துவரிடம் நடந்த விபரத்தை கூறியுள்ளார்.
மருத்துவமனை அளித்த தகவலின் அடிப்படையில், தலைமைச் செயலக காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று மதியம் தனுஷை கைது செய்தனர். ஆட்டோ டிரைவரான தனுஷ் மீது ஏற்கனவே ஒரு வழக்கு உள்ளது.