/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலை மைய தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
/
சாலை மைய தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
ADDED : மார் 06, 2025 02:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அடையாறு,துரைப்பாக்கம், சாந்தி நிகேதன் காலனியை சேர்ந்தவர் கவுதம் ஸ்ரீஹரி, 22. எழும்பூரில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் பணி புரிந்தார்.
பணி முடித்து, நேற்று அதிகாலை, இருசக்கர வாகனத்தில் வீடு நோக்கி புறப்பட்டார். அடையாறு, திரு.வி.க., பாலம் கடந்து சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலை மைய தடுப்பில் மோதியது.
இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.