/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
16 வயது சிறுமிக்கு தொல்லை வாலிபர் 'போக்சோ'வில் கைது
/
16 வயது சிறுமிக்கு தொல்லை வாலிபர் 'போக்சோ'வில் கைது
16 வயது சிறுமிக்கு தொல்லை வாலிபர் 'போக்சோ'வில் கைது
16 வயது சிறுமிக்கு தொல்லை வாலிபர் 'போக்சோ'வில் கைது
ADDED : ஜூலை 11, 2024 12:43 AM

வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டையை சேர்ந்த 16 வயது சிறுமியும், திருவள்ளூர், கொன்னஞ்சேரியைச் சேர்ந்த ஸ்ரீநாத், 20, என்பவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். ஸ்ரீநாத் காதலை சிறுமி ஏற்க மறுத்துள்ளார்.
இந்நிலையில், அருகில் வசிக்கும் தன் தோழி சுபா என்பவரது வீட்டிற்கு சிறுமி சென்றுள்ளார். அப்போது, தலைவலிப்பதாக சிறுமி கூறியுள்ளார்.
அங்கு வந்த ஸ்ரீநாத், தலைவலி மாத்திரை எனக்கூறி, சிறுமிக்கு போதை மாத்திரை கொடுத்துள்ளார். அதை விழுங்கிய சிறுமி நேரத்தில் சிறிது மயக்கம் அடைந்துள்ளார்.
இதையடுத்து ஸ்ரீநாத், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, சிறுமியிடம் பலமுறை உறவு வைத்துள்ளார்.
இதுகுறித்து வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், பெற்றோர் புகார் அளித்தனர். வழக்கு பதிந்த போலீசார், போக்சோ சட்டத்தில், ஸ்ரீநாத்தை கைது செய்தனர்.
ஓட்டேரியை சேர்ந்த பெண்ணின் 16 வயது மகள், புழல் கேம்ப் பகுதியை சேர்ந்த யுவராஜ், 22, என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
இதை, சிறுமியின் தாய் கண்டித்துள்ளார். இதையடுத்து, வீட்டில் சண்டை போட்டு, யுவராஜ் உடன் சிறுமி மாயமானார்.
திருமணம் செய்து கொண்டு, கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில், காவாங்கரையில் உள்ள பெட்ரோல் 'பங்க்'கில் இருவரும் வேலைக்கு சேர்ந்தனர்.
வேலைக்கு சேர்ந்த முதல் நாளே, வசூல் பணத்தை திருடி சென்ற வழக்கில் யுவராஜ் புழல் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சிறுமி காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் தன் மகளை ஏமாற்றி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட யுவராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புளியந்தோப்பு மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார்.
மேலும் காப்பகத்தில் இருந்த மகளையும் அவர் மீட்டார். இது குறித்து ஓட்டேரி போலீசார் விசாரிக்கின்றனர்.