நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தர்மதுரை,26. இவர், ஸ்ரீபெரும்புதுார் - குன்றத்துார் நெடுஞ்சாலையில் சோமங்கலம் அருகே, புதுநல்லுார் பகுதியில் நேற்று மாலை, ஹோண்டா ஷைன் பைக்கில் சென்றார்.
அப்போது, நிலை தடுமாறி கீழே விழுந்த தர்மதுரை மீது, பின்னால் வந்த சிமென்ட் கான்கிரீட் கலவை லாரி ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே பலியானார்.
கூடுவாஞ்சேரி போக்குவரத்து போலீசார், தர்மதுரையின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.