நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆலந்துார், புழுதிவாக்கம், செங்கேணி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வினில், 32. தனியார் நிறுவன ஊழியரான இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடித்து, தன்னுடைய 'பல்சர்' பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
ஆதம்பாக்கம் - மேடவாக்கம் பிரதான சாலை, கேசரி நகர் சந்திப்பு அருகே, எதிரே வந்த குட்டி யானை லோடு வேன், பைக் மீது வேகமாக மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட வினில், பலத்த காயமடைந்து அதே இடத்திலே பலியானர்
பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார், வினில் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
வேனை ஓட்டி வந்த அண்ணா நகரை சேர்ந்த சண்முகம், 42, என்பவரை கைது செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.