ADDED : செப் 15, 2024 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, பீஹார் மாநிலம், கோபால்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராகுல்குமார், 19. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கட்டட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்ற இவர், கவுகாத்தி -- பெங்களூரு அதிவிரைவு ரயிலில் பயணித்தார்.
நேற்று, கத்திவாக்கம் - விம்கோ நகர் இடையே, இந்த ரயில் வந்தபோது, படிக்கட்டு அருகே நின்றுக் கொண்டிருந்த ராகுல், நிலை தடுமாறி விழுந்தார்.
ரயிலின் சக்கரத்தில் சிக்கிய அவரின் வலது கால், கை துண்டாகி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கொருக்குபேட்டை ரயில்வே போலீசார், அவரது உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.