/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மண்டல ஹாக்கி போட்டி எம்.ஓ.பி., வைஷ்ணவ் சாம்பியன்
/
மண்டல ஹாக்கி போட்டி எம்.ஓ.பி., வைஷ்ணவ் சாம்பியன்
ADDED : செப் 11, 2024 12:23 AM

சென்னை,
மண்டல ஹாக்கி போட்டியில் எம்.ஓ.பி., வைஷ்ணவ் அணி சாம்பியன் கோப்பையை வென்றது.
சென்னை பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகள், 'ஏ' மற்றும் 'பி' என, இரு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் 'ஏ' மண்டல ஹாக்கி போட்டி, எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் நடந்தது.
இப்போட்டியில், 'ஏ' மண்டலத்திற்கு உட்பட்ட எம்.ஓ.பி., வைஷ்ணவ் - பி.டபிள்யு.சி., - எஸ்.ஆர்.எம்., - ராணிமேரி, பச்சையப்பா உள்ளிட்ட அணிகள் பங்கேற்றன.
இறுதிப்போட்டியில், எம்.ஓ.பி., வைஷ்ணவ் அணி, 3 - 1 என்ற கணக்கில், எஸ்.ஆர்.எம்., கலை கல்லுாரி அணியை தோற்கடித்து, 'சாம்பியன்' கோப்பையை வென்றது.
அதைத்தொடர்ந்து, எஸ்.டி.என்.பி., மற்றும் ராணி மேரி கல்லுாரி அணிகள் மூன்று மற்றும் நான்காம் இடங்களைப் பிடித்தன.