ADDED : செப் 26, 2026 05:12 PM
அ நிறம் | அளவு
திருவொற்றியூர், செப். 27–
மின்சார ரயில் மூலம் ஆந்திராவிற்கு கடத்தவிருந்த, 1.1 டன் ரேசன் அரிசியை, ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், நேற்று முன்தினம் மாலை, திருவொற்றியூர், விம்கோ நகர், அத்திப்பட்டு, கொருக்குப்பேட்டை ரயில்வே நிலையத்தில், தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, மின்சார ரயில் மூலம் ஆந்திராவிற்கு கடத்துவதற்காக, ரயில்வே நடைமேடையின், பயணியர் இருக்கைக்கு கீழ், மறைத்து வைக்கப்பட்டிருந்த, தலா, 20 கிலோ வீதம், 52 மூட்டைகளில், 1.1 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட, ரேசன் அரிசி மூட்டைகள் குடிமைப் பொருள் மற்றும் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
