/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
1 கிலோ கஞ்சா பறிமுதல் இரு ரவுடி கைது
/
1 கிலோ கஞ்சா பறிமுதல் இரு ரவுடி கைது
ADDED : ஜூலை 31, 2025 12:46 AM

அயனாவரம்அயனாவரம், நியூ ஆவடி சாலையில் நின்ற அம்பத்துார், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ரவுடி வண்டு சிவா, 22, புரசைவாக்கம் ரவுடி 'முயல் காது' அப்பு, 20, ஆகிய இருவரை, போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா சிக்கியது.
வீட்டில் தீ மடிக்கணினி நாசம்
வானகரம்போரூர் அடுத்த, செட்டியார் அகரம் விஜயலட்சுமி நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் செல்வம், 48; தி.நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பணிபுரிகிறார். இவர், பணி நிமித்தமாக குஜராத் மாநிலம் சென்றுள்ளார்.
அவரது மனைவி திருமகள், 43, மகன், மகள் ஆகியோர் வீட்டில் இருந்த நிலையில், நேற்று காலை படுக்கை அறையில் தீ பிடித்தது. மெத்தை, மடிக்கணினி உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. மின் கசிவு காரணமாக தீ பற்றியிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
வாலிபரிடம்மொபைல்போன் பறிப்பு
மதுரவாயல், அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் எபினேசர், 20. கல்லுாரியில் பட்டப்படிப்பு முடித்து வேலையின்றி உள்ளார். நேற்று முன்தினம் இரவு, அரும்பாக்கத்தில் உள்ள சர்ச்சில் ஆராதனை முடித்து, தன் நண்பருடன் மதுரவாயல் சென்று கொண்டிருந்தார்.
பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல் அருகே, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், எபினேசர் கையில் இருந்த மொபைல் போனை பறித்து தப்பினர். மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.
புகையிலை விற்ற மளிகை
கடைக்காரர் கைது
டி.பி.,சத்திரம், ஜூலை 31-
டி.பி.,சத்திரம், ஜோதியம்மாள் நகரில், 10க்கும் மேற்பட்ட கடைகளில், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை செய்தனர்.
அங்கு, 'ஸ்ரீ லட்சுமி ஸ்டோர்ஸ்' என்ற மளிகை கடையில், சட்ட விரோதாக விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்கள் கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன. கடையின் உரிமையாளரான மகேந்திரனை, 40, டி.பி.சத்திரம் போலீசார் கைது செய்தனர். உணவு பாதுகாப்பு அதிகாரிகள், கடைக்கு 'சீல்' வைத்தனர்.
சில வரி/ சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்றவர் கைது
சென்னை, ஜூலை 31-
தேனாம்பேட்டை, ஆலயம்மன் கோவில் தெருவில், தேனாம்பேட்டை போலீசார் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சட்ட விரோதமாக கூடுதல் விலைக்கு மதுபாட்டில் விற்பனை செய்த நாராயணன், 47, என்பவரை கைது செய்து, 14 குவாட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

