/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாளியில் தவறி விழுந்து 1 வயது குழந்தை பலி
/
வாளியில் தவறி விழுந்து 1 வயது குழந்தை பலி
ADDED : ஆக 03, 2025 12:26 AM
வானகரம்,தண்ணீர் வாளியில் தவறி விழுந்து, ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
வானகரம், பாப்பம்மாள் ரெட்டி தெருவைச் சேர்ந்தவர் அசோத்தமன், 36; ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி சவுமியா, 30. இவர்களது மகள்கள் நக் ஷா, 3, மற்றும் தீக் ஷா, 1.
மூத்த குழந்தை நக் ஷா, உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு சவுமியா நேற்று மாலை மருந்து கொடுத்து கொண்டிருந்தார். அப்போது, வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்த தீக் ஷாவை காணாததால் தேடினார்.
குளியலறையில் சென்று பார்த்தபோது, அங்கு தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த வாளியில், குழந்தை தீக் ஷா தலைக்குப்புற கவிழ்ந்து கிடைப்பதை கண்டு, அதிர்ச்சியடைந்து கதறினார்.
சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில், குழந்தை உயிரிழந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த வானகரம் போலீசார், குழந்தையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.