/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இறந்து கரை ஒதுங்கிய 10 கடல் ஆமைகள்
/
இறந்து கரை ஒதுங்கிய 10 கடல் ஆமைகள்
ADDED : ஜன 10, 2025 12:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழவேற்காடு, திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு முகத்துவாரம் பகுதியில் துவங்கி, காட்டுப்பள்ளி வரை உள்ள கடற்கரை ஓரங்களில், இறந்த நிலையில் கடல் ஆமைகள் கரை ஒதுங்குவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
நேற்று காலை, பழவேற்காடு முகத்துவாரம் பகுதியில், 10க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள், இறந்த நிலையில் கரை ஒதுங்கின. இதை கண்டு மீனவர்கள் கவலை அடைந்தனர். ஒரு மாதத்தில். 30க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியதாகவும், அவை பள்ளம் தோண்டி புதைத்ததாகவும், வனத்துறையினர் தெரிவித்தனர்.