/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இரு பஸ்கள் உரசி விபத்து பயணியர் 10 பேர் காயம்
/
இரு பஸ்கள் உரசி விபத்து பயணியர் 10 பேர் காயம்
ADDED : நவ 15, 2024 01:29 AM

திருத்தணி, காஞ்சிபுரத்திலிருந்து திருப்பதி செல்லும் ஆந்திர மாநில அரசு பேருந்து, நேற்று மதியம் 12:30 மணியளவில், 20 பயணியருடன் திருத்தணி பேருந்து நிலையம் அருகே வந்தது. பேருந்தை சிவய்யா, 40, என்பவர் இயக்கினார். நடத்துனராக ரமேஷ், 48, என்பவர் பணியில் இருந்தார்.
திருத்தணி வள்ளியம்மாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது, திருத்தணியில் இருந்து செங்கல்பட்டு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து, இந்த பேருந்தின் மீது உரசி, சாலையோர இரும்பு தடுப்பு வேலி மீது மோதி நின்றது.
இதில், தனியார் பேருந்தின் முன்பகுதி சேதமடைந்தது. அதில் பயணம் செய்த 30 பேரில், 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.