/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இருவரை தாக்கி போன் பறித்த சிறுவர்கள் உட்பட 10 பேர் கைது
/
இருவரை தாக்கி போன் பறித்த சிறுவர்கள் உட்பட 10 பேர் கைது
இருவரை தாக்கி போன் பறித்த சிறுவர்கள் உட்பட 10 பேர் கைது
இருவரை தாக்கி போன் பறித்த சிறுவர்கள் உட்பட 10 பேர் கைது
ADDED : ஜன 07, 2025 12:35 AM
சென்னை, வியாசர்பாடி, கோல்டன் காம்ப்ளஸ் 3வது செக்டர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 50. இவர், கொருக்குப்பேட்டை கூட்செட்டில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு கூட்செட் வழியாக நடந்து சென்றார்.
அப்போது, மர்ம நபர் கும்பல், ராஜ்குமாரை தாக்கி அவரது மொபைல் போனை பறித்து தப்பினர். இதில் முகம் மற்றும் கையில் காயமடைந்தவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து எம்.கே.பி.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
இதில், வியாசர்பாடி, தாமோதர் நகரைச் சேர்ந்த மோகன கிருஷ்ணன், 21, மதன், 23, ஆறுமுகம், 21, எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்த நவீன், 21, ஜே.ஜே.ஆர்.நகர் 3வது தெருவை சேர்ந்த ஜெகன், 34, ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஐவரையும் நேற்று கைது செய்தனர்.
தண்டையார்பேட்டை, அழகிரி தெருவைச் சேர்ந்தவர் எத்திராஜ், 60. இவர், கொருக்குப்பேட்டையில் பேன்சி கடை நடத்தி வருகிறார். எத்திராஜ், நேற்று முன்தினம் நள்ளிரவு கடையை பூட்டிவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றார்.
தண்டையார்பேட்டை, நேதாஜி நகரில் வந்தபோது, அங்கிருந்த 5 பேர் கும்பல், எத்திராஜின் பைக்கை வழிமறித்து தாக்கி மொபைல் போனை பறித்து தப்பினர். இது குறித்து ஆர்.கே.நகர், போலீசார் விசாரித்தனர்.
இதில், கொடுங்கையூர் எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்த மோகன்ராஜ், 18, அமானுல்லா, 18, அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கார்த்திக், 19, மற்றும் இரு சிறுவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.