/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆவடியில் பீதி நாய்கள் கடித்து 10 ஆடுகள் பலி
/
ஆவடியில் பீதி நாய்கள் கடித்து 10 ஆடுகள் பலி
ADDED : ஆக 03, 2025 12:22 AM

நாய்கள் கடித்து
10 ஆடுகள் பலி?
ஆவடி :ஆட்டு கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டு இருந்த 10 ஆடுகள், மர்மமான முறையில் இறந்தது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
ஆவடி அடுத்த சேக்காடு, வரதாபுரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நீலகண்டன், 38. இவர், மூன்று மாதங்களாக, வீட்டருகே கொட்டகை அமைத்து, ஆடு வளர்த்து வருகிறார்.
நேற்று காலை வழக்கம்போல, எழுந்து பார்த்தபோது, கொட்டகையில் கட்டப்பட்டிருந்த 10 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இது குறித்து ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'நாய்கள் கடித்து ஆடுகள் இறந்ததாக நீலகண்டன் தெரிவித்துள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின் தான், ஆடுகள் இறந்ததற்கான காரணம் குறித்து தெரிய வரும்' என, தெரிவித்தனர்.