/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அலமாரியில் இருந்த 10 சவரன் நகை பணம் திருட்டு
/
அலமாரியில் இருந்த 10 சவரன் நகை பணம் திருட்டு
ADDED : மே 31, 2025 03:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடுங்கையூர்:கொடுங்கையூர், கவியரசு கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ்பாபு, 59; 'பிரிட்டானியா' நிறுவன பிஸ்கட் டெலிவரி செய்யும் தொழில் செய்கிறார்.
கடந்த 26ம் தேதி, இவரது வீட்டில் பழுதுபார்க்கும் பணியில் இரு ஊழியர்கள் ஈடுபட்டனர். அதன் பின், அலமாரியில் லெதர் பையில் வைத்திருந்த 10 சவரன் தங்க நகைகள், 20,000 ரூபாய் மாயமானது தெரிந்தது.
ரமேஷ்பாபு புகாரின்படி, வழக்கு பதிந்த கொடுங்கையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.