sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 திருநெல்வேலி, கோவை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

/

 திருநெல்வேலி, கோவை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

 திருநெல்வேலி, கோவை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

 திருநெல்வேலி, கோவை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு


ADDED : ஜன 04, 2026 05:58 AM

Google News

ADDED : ஜன 04, 2026 05:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பொங்கல் பண்டிகையையொட் டி, சென்னையில் இருந்து திருநெல்வேலி, கோவை உட்பட பல்வேறு இடங்களுக்கு, 10 சிறப்பு ர யில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை:

நாகர்கோவிலில் இருந்து, வரும் 11, 18ம் தேதிகளில், இரவு 11:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 10:15 மணிக்கு தாம்பரம் வரும். தாம்பரத்தில் இருந்து, வரும் 12, 19ம் தேதிகளில், மாலை 3:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 3:30 மணிக்கு கன்னியாகுமரி செல்லும்

கன்னியாகுமரியில் இருந்து, வரும் 13, 20ம் தேதிகளில், இரவு 8:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 10:15 மணிக்கு தாம்பரம் வரும். தாம்பரத்தில் இருந்து, வரும் 14, 21ம் தேதிகளில், மதியம் 12:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 3:30 மணிக்கு நாகர்கோவில் செல்லும்

திருநெல்வேலியில் இருந்து, வரும் 9, 16ம் தேதிகளில், அதிகாலை 3:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளில் மதியம் 1:15 மணிக்கு செங்கல்பட்டு வரும். செங்கல்பட்டில் இருந்து வரும் 9, 16ம் தேதிகளில், மாலை 3:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 2:00 மணிக்கு திருநெல்வேலி செல்லும்

திருநெல்வே லியில் இருந்து, வரும் 10, 17ம் தேதிகளில், அதிகாலை 3:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளில் மதியம் 1:15 மணிக்கு செங்கல்பட்டு செல்லும். செங்கல்பட்டில் இருந்து, வரும் 10, 17ம் தேதிகளில், மாலை 5:00 மணிக் கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 3:00 மணிக்கு திருநெல்வேலி செல்லும்

கோவையில் இருந்து, வரும் 11, 18ம் தேதிகளில், இரவு 11:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 9:50 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரும். சென்ட்ரலில் இருந்து, வரும் 12, 19ம் தேதிகளில், இரவு 11:25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 9:00 மணிக்கு கோவை செல்லும்

போத்தனுாரில் இருந்து, வரும் 14, 21ம் தேதிகளில், நள்ளிரவு 12:35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளில் காலை 10:30 மணிக்கு சென்ட்ரல் வரும். சென்ட்ரலில் இருந்து வரும் 14, 21ம் தேதிகளில், மதியம் 1:50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளில் இரவு 11:15 மணிக்கு போத்தனுார் செல்லும்

திருநெல்வேலியில் இருந்து, வரும் 8ம் தேதி இரவு 11:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 10:30 மணிக்கு எழும்பூர் வரும். எழும்பூரில் இருந்து வரும் 9ம் தேதி, பகல் 12:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளி ல் இரவு 11:30 மணிக்கு திருநெல்வேலிக்கு செல்லும்

கர்நாடகா மாநிலம், மங்களூரில் இருந்து, வரும் 13ம் தேதி அதிகாலை 3:10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளில் இரவு 11:30 மணிக்கு சென்ட்ரல் வரும். சென்ட்ரலில் இருந்து, வரு ம் 14ம் தேதி அதிகாலை 4:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளில் இரவு 11:30 மணிக்கு ம ங்களூரு செல்லும்

ஈரோட்டி ல் இருந்து, வரும் 13ம் தேதி மாலை 4:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 11:30 மணிக்கு செங்கோட்டை செல்லும். செங்கோட்டையில் இருந்து, வரும் 14ம் தேதி இரவு 8:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் இரவு 7:30 மணிக்கு போத்தனுார் செல்லும்

ராமேஸ் வரத்தில் இருந்து, வரும் 13, 20ம் தேதிகளில், இரவு 8:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 10:15 மணிக்கு தாம்பரம் வரும். தாம்பரத்தில் இருந்து, வரும் 14, 21ம் தேதிகளில், மதியம் 2:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 3:30 மணிக்கு ராமேஸ்வரம் வரும். மேற்கண்ட சிறப்பு ரயில்களில், இன்று காலை 8:00 மணிக்கு முன்பதிவு துவங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடற்கரை - செங்கை 'ஏசி' ரயில் சேவையில் நாளை முதல் மாற்றம் சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கை: மின்சார ரயில் இயக்கம் மற்றும் பயணியர் வசதியை கருத்தில் கொண்டு, சென்னை - செங்கல்பட்டு தடத்தில் இயக்கப்படும் 'ஏசி' மின்சார ரயில்களின் சேவையில், நாளை முதல் சில மாற்றங்கள் அமல்படுத்தப்படுகிறது. இதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து மதியம் 2:30 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டுக்கு செல்ல வேண்டிய 'ஏசி' மின்சார ரயில், இனி மாலை 3:47 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். தாம்பரத்தில் இருந்து மதியம் 1:00 மணிக்கு புறப்பட்டு கடற்கரைக்கு செல்ல வேண்டிய 'ஏசி' ரயில், இனி மாலை 3:23 மணிக்கு புறப்படும். செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு மாலை 4:30 மணிக்கு புறப்பட வேண்டிய 'ஏசி' ரயில், இனி, தாம்பரத்தில் இருந்து மாலை 5:55 மணி புறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us