/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'மனிதநேய' மையத்தில் பயின்ற 10 பேர் எஸ்.ஐ., தேர்வில் வெற்றி
/
'மனிதநேய' மையத்தில் பயின்ற 10 பேர் எஸ்.ஐ., தேர்வில் வெற்றி
'மனிதநேய' மையத்தில் பயின்ற 10 பேர் எஸ்.ஐ., தேர்வில் வெற்றி
'மனிதநேய' மையத்தில் பயின்ற 10 பேர் எஸ்.ஐ., தேர்வில் வெற்றி
ADDED : பிப் 01, 2024 12:19 AM
சென்னை, சமுதாயம் மற்றும் பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களுக்கு உதவுவதற்காக, 2005ல் துவக்கப்பட்ட சைதை துரைசாமியின், மனிதநேய அறக்கட்டளை சார்பில், 'மனித நேயம் ஐ.ஏ.எஸ் கட்டணமில்லா கல்வியகம்' துவக்கப்பட்டது.
இங்கு, பயிற்சி பெற்ற அனைத்து தரப்பு மாணவ - மாணவியரும், தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவிலான தேர்வுகளில் வெற்றி பெற்று 3,708க்கும் மேற்பட்டோர், பல்வேறு உயர் பதவிகளில் உள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு முடிவு, 2023, அக்., 26ல் வெளியிடப்பட்டது.
இதில் தேர்ச்சி அடைந்தோருக்கு, நேர்முகத் தேர்வை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து, மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., இலவச கல்வியகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. நேர்முகத் தேர்வு முடிவுகள், ஜன., 29ம் தேதி வெளியிடப்பட்டது.
இதில், 'மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களில் 10 பேர் வெற்றி பெற்றுள்ளனர்' என, மனிதநேய அறக்கட்டளையில் நிறுவனத் தலைவர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.