தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 100 பறிமுதல் வாகனங்கள் தீயில் எரிந்து நாசம்

100 பறிமுதல் வாகனங்கள் தீயில் எரிந்து நாசம்

100 பறிமுதல் வாகனங்கள் தீயில் எரிந்து நாசம்


UPDATED : மே 24, 2026 10:29 PM

ADDED : மே 24, 2026 10:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 24, 2026 10:29 PM ADDED : மே 24, 2026 10:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பூந்தமல்லி: விபத்து வழக்குகளில் சிக்கி போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள், தீயில் எரிந்து நாசமாகின.

ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையம், பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பம் பகுதியில் உள்ளது. விபத்து வழக்குகளில், போலீசாரால் பறிமுதல் செய்யப்படும் இருசக்கர வாகனங்கள், பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்னீர்குப்பம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த வாகனங்களை நிறுத்தியிருந்த இடம், பராமரிப்பின்றி செடிகள் வளர்ந்து இருந்தது. இந்நிலையில் காலை, திடீரென தீ விபத்து ஏற்பட்டு, வாகனங்கள் தீயில் எரிந்தன.

பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அதற்குள் 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், தீயில் எரிந்து நாசமாகின. தீ விபத்து குறித்து பூந்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us