ADDED : செப் 26, 2024 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார், சோமங்கலம் -நல்லுார் சாலையில், நேற்று காலை, சோமங்கலம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த, 'ஹூண்டாய் கிரட்டா' கார் நிற்காமல் வேகமாக சென்றது. அந்த காரை விரட்டி சென்று, போலீசார் நிறுத்தினர். காரில் மூட்டை மூட்டையாக, 100 கிலோ குட்கா இருந்தது.
குட்காவை பறிமுதல் செய்த போலீசார், காட்ரம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜ்குமார், 27, கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கணேஷ், 24, ஆகிய இருவரையும் பிடித்து விசாரிக்கின்றனர்.

