/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
100 கிலோ பிளாஸ்டிக் குப்பை எண்ணுார் கடற்கரையில் சேகரிப்பு
/
100 கிலோ பிளாஸ்டிக் குப்பை எண்ணுார் கடற்கரையில் சேகரிப்பு
100 கிலோ பிளாஸ்டிக் குப்பை எண்ணுார் கடற்கரையில் சேகரிப்பு
100 கிலோ பிளாஸ்டிக் குப்பை எண்ணுார் கடற்கரையில் சேகரிப்பு
ADDED : ஜூலை 06, 2025 12:19 AM

திருவொற்றியூர், தாழங்குப்பம் கடற்கரையில், சி.பி.சி.எல்., பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து, 100 கிலோ பிளாஸ்டிக் குப்பையை சேகரித்தனர்.
சி.பி.சி.எல்., நிறுவனம் சார்பில், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 15 நாட்களுக்கு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, பள்ளி கல்லுாரி மற்றும் பொது இடங்களில், துாய்மையை வலியுறுத்தும் வகையில் போட்டிகள், நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, எண்ணுார் - தாழங்குப்பம் கடற்கரையில், 'வாக் பார் பிளாஸ்டிக்' எனும் தன்னார்வ அமைப்புடன் சேர்ந்து, சி.பி.சி.எல்., பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் உட்பட, 100 க்கும் மேற்பட்டோர் நேற்று காலை, பிளாஸ்டிக் குப்பையை சேகரித்தனர்.
அதன்படி, பிளாஸ்டிக் கவர், பாட்டில்கள் உட்பட, 100 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் குப்பை சேகரிக்கப்பட்டு உள்ளது.