ADDED : ஜன 10, 2024 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாதவரம், மாதவரம், தட்டான்குளம் சாலையைச் சேர்ந்தவர் கவுதம் சந்த் ஜெயின், 53. இவர் அதே பகுதியில், மின் உபயோக பொருட்கள் விற்கும் தொழில் செய்கிறார்.
கடந்த 7ம் தேதி, இவர் மின்சாதன பொருட்கள் இருப்பு வைத்துள்ள குடோனில் இருந்து, 100 கிலோ ஒயர் திருடு போனது தெரிந்தது.
இது குறித்து விசாரித்த மாதவரம், கனக்கன் சத்திரத்தைச் சேர்ந்த மூர்த்தி, 34, உட்பட இருவரை கைது செய்து 30 கிலோ 'காப்பர்' கம்பியை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.

