ADDED : நவ 28, 2024 12:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குறித்த கேள்விக்கு, 'ராமதாசுக்கு வேறு வேலை இல்லாததால் தினமும் அறிக்கை வெளியிடுகிறார். அதற்கு பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை' என்று, முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் பதில் அளித்தார்.
இதனால் அதிருப்தியடைந்த பா.ம.க.,வினர், இரண்டு நாட்களாக ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று காலை, மாவட்ட செயலர் முத்துகுமார் தலைமையில், நுாற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் அனுமதி மறுத்ததால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அனுமதியின்றி போராடிய, 100 பேரையும் போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.