ADDED : மார் 11, 2026 05:38 AM
அ நிறம் | அளவு
கீழ்ப்பாக்கம்: தமிழக சட்டசபை தேர்தல் தேதி, இம்மாதம் அறிவிக்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு, நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்த போலீசார், இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், கீழ்ப்பாக்கம், அயனாவரம், டி.பி., சத்திரம், தலைமை செயலகம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணியாற்றிய ஆண்கள், பெண்கள் என 100 போலீஸ்காரர்கள், அதே காவல் மாவட்டத்தில் வேறு காவல் நிலையங்களுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
