தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பாதுகாப்பில் 1,000 போலீசார்

பாதுகாப்பில் 1,000 போலீசார்

பாதுகாப்பில் 1,000 போலீசார்


ADDED : நவ 05, 2024 12:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 05, 2024 12:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாதுகாப்பில் 1,000 போலீசார்

போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், தாம்பரம் போலீசார், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர். கனரக வாகனங்கள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் சாலையில் திருப்பி விடப்பட்டு, வாலாஜாபாத் சாலை வழியாக, காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதுார், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னையை வந்தடைந்தன.

அதேபோல், சிங்கபெருமாள் கோவில் வழியாக வந்த வாகனங்களை, ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் வழியாக, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னைக்கு திருப்பி விடப்பட்டன.

இரும்புலியூர் பாலம் வழியாக வந்த வாகனங்கள், வண்டலுார் வெளிவட்ட சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. இதனால், வெளியூர்களில் இருந்து வந்தோர், போக்குவரத்து நெரிசலின்றி சென்னைக்கு திரும்பினர்.

கடந்த இரு நாட்களில் 35,585 கார்கள், 1,675 பேருந்துகள், 3,604 லாரிகள் மற்றும் பிற வாகனங்கள் சென்னைக்கு வந்துள்ளன. பாதுகாப்பு பணியில் 1,000 போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us