UPDATED : ஏப் 14, 2026 11:20 PM
ADDED : ஏப் 14, 2026 11:18 PM
அ நிறம் | அளவு
சென்னை:தமிழகத்தின் 11 இடங்களில், வெயில் சதம் அடித்தது.
தமிழகம் முழுதும், கோடை வெப்பம் அதிகரித்து வருகிறது. ஏப்ரல் 14 அன்று மாநிலம் முழுதும் வெயில் அதிகமாக இருந்தது. அதிகபட்சமாக, கரூர் பரமத்தியில் 105.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. அதற்கு அடுத்தபடியாக, வேலுார் 104.36; மதுரை விமான நிலையம், தர்மபுரி, சேலம் ஆகியவற்றில் 102.2; கோவை மற்றும் நாமக்கல்லில் 101.3; திருச்சியில் 100.5; பாளையங்கோட்டை, திருப்பத்துார், மதுரை நகரம் ஆகியவற்றில், 100 டிகிரி வெப்பம் பதிவானது.
***
