/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆக்கிரமிப்பில் சிக்கிய 12 சென்ட் இடம் மீட்பு
/
ஆக்கிரமிப்பில் சிக்கிய 12 சென்ட் இடம் மீட்பு
ADDED : மார் 25, 2025 02:07 AM
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமத்தில், புல எண் 180/17ல், கிராம நத்தம் வகைப்பாடு நிலத்தை, தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து நிறுவனம் நடத்தி வந்தார்.
அந்த ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் பின், ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய்த் துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதையடுத்து, கடந்த 22ம் தேதி, வருவாய்த்துறை, போலீசார், தீயணைப்புத் துறையினர் இணைந்து, ஆக்கிரமிப்பை அகற்றி இடத்தை மீட்டனர்.
இதுகுறித்து, வருவாய்த் துறையினர் கூறியதாவது:
நத்தம் வகைப்பாடு நிலத்தில், வீடு மட்டுமே கட்டி வசிக்க முடியும். ஆனால், வணிகரீதியாக கட்டடம் கட்டி செயல்பட்டதால், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டுள்ளோம். ஆக்கிமிரப்பு செய்யப்பட்ட 12 சென்ட் நிலத்தின் மதிப்பு, 18.05 லட்சம் ரூபாய்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.