/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை ஏர்போர்டில் 12 விமானங்கள் ரத்து
/
சென்னை ஏர்போர்டில் 12 விமானங்கள் ரத்து
ADDED : மே 11, 2025 12:36 AM
சென்னை, நாட்டின் எல்லையில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, சென்னையில் இருந்து சில இடங்களுக்கு செல்லும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்தில் இருந்து, ஆப்ரிக்காவின் எத்தியோப்பியாவில் உள்ள அடிஸ் அபாபாவிற்கு, நேற்று முன்தினம் 2:10 மணிக்கு புறப்பட இருந்த விமானம், காசியாபாத் அருகே உள்ள ஹிண்டன் நகருக்கு அதிகாலை 5:50 மணிக்கு செல்லும் விமானம், மதுரை செல்லும் காலை 10:10 மணி விமானம்; ஹரியானா மாநிலம், சண்டிகர் செல்லும் காலை 11.10 மணி விமானம்; திருச்சி செல்லும் மாலை 4:35 மணி விமானம், மதுரை செல்லும் மாலை 6:10 மணி விமானம் என ஆறு புறப்பாடு விமானங்கள் மற்றும் பல்வேறு நகரங்களில் இருந்து வரும் ஆறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல, நேற்று மாலை ஹிண்டனில் இருந்து சென்னை வரும் விமானம், காலை சண்டிகரில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. பயணியர் விமான நிறுவனங்கள், இணையதளத்தில் சரிபார்த்து பயணத்தை தேர்வு செய்யும்படி அதிகாரிகள் தெரிவித்தனர்.