ADDED : மார் 18, 2024 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு:புளியந்தோப்பு, அம்பேத்கர் நகர் முதல் தெருவில், போலீசார் நடத்திய சோதனையில், மாவா என்ற போதை வஸ்துவை விற்று வந்த சண்முகசுந்தரம், 49, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரது வீட்டை சோதனையிட்ட போது, இரண்டு கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்த விசாரணையில், திருவல்லிக்கேணியை சேர்ந்த இம்ரான்கான், 30, என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
இவரிடமிருந்து, 12 கிலோ மாவா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 20,000 ரூபாய். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.

