காப்புக்காட்டில் விடப்பட்ட 12 சாரை பாம்பு குட்டிகள்
காப்புக்காட்டில் விடப்பட்ட 12 சாரை பாம்பு குட்டிகள்
ADDED : செப் 30, 2026 05:12 PM

அ நிறம் | அளவு
ஆவடி: அண்ணனுாரில், ஒரு வீட்டின் வளாகத்தில் இருந்து மீட்கப்பட்ட முட்டைகளில் இருந்து வெளிவந்த சாரைப் பாம்பு குட்டிகளை, வனத்துறையினர் நேற்று பத்திரமாக காப்புக்காட்டில் விட்டனர்.
ஆவடி அடுத்த அண்ணனுார், ஜே.பி., நகரைச் சேர்ந்தவர் பிரதிக்கா நிவாஸ். இவரது வீட்டு வளாகத்தில் பாம்புகள் சுற்றுவதாக, ஆக., 10ம் தேதி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். செங்குன்றம் வனத்துறையினர் சோதனையிட்டபோது, நில அளவை கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தில், எலிகள் தோண்டிய வளைக்குள் 12 பாம்பு முட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றை மீட்ட வனத்துறையினர், 50 நாட்கள் பாதுகாப்பாக பராமரித்தனர். முட்டைகளில் இருந்து வெளியேறிய 12 சாரைப் பாம்புகளும், செங்குன்றம் அடுத்த வெங்கல் காப்புக்காட்டில் நேற்று விடப்பட்டன.
